ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என ஒரு வேத ஜோதிடர் கணித்துள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், “மார்ச் 21, 2026 அன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த ஜாதகப்படி அதிக வாய்ப்புள்ளது. அன்றைய தினம் ‘அங்காரக யோகம்’ மற்றும் ‘கபர் யோகம்’ உருவாவதால், இந்தியாவின் எல்லை வரைபடம் மாறப்போவது உறுதி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மீண்டும் இந்தியாவுடன் இணையும்” என அவர் அடித்துச் சொல்லியுள்ளார்.
மேலும், மார்ச் 21-ம் தேதிக்கு முன்னரே தேவையான மருந்து மாத்திரைகள், சோலார் சார்ஜர் மற்றும் 2 மாதங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களை எச்சரித்துள்ளார். பிரதமர் மோடியின் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் திசை மற்றும் நாட்டின் ஜாதக நிலைகளை வைத்து இந்தக் கணிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆனால், “வியூஸ்களுக்காகவும், வைரல் ஆகவும் இப்படி மக்களைப் பயமுறுத்தாதீர்கள்” என நெட்டிசன்கள் அந்த ஜோதிடரை விளாசி வருகின்றனர். “ஒருத்தரை பார்த்து ஒருத்தர் பயத்தை விதைப்பதையே வேலையா வச்சிருக்காங்க” எனப் பலரும் கமெண்ட் செக்ஷனில் ஆவேசப்பட்டு வருகின்றனர்.
