பெங்களூரு வர்த்தூர் பகுதியில் உள்ள ‘பிரிகேட் உட்டோபியா’ அப்பார்ட்மென்ட் இப்போது ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. தருண் அரோரா என்பவர் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, அந்த நாய் அங்கேயே சிறுநீர் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அங்கிருந்த முதியவர்கள் தட்டிக்கேட்க, விவாதம் முற்றி அடிதடியாக மாறியது. சுமார் 7 முதல் 8 முதியவர்கள் சேர்ந்து தருணை சரமாரியாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
A scuffle broke out between senior citizens over a dog urinating in a designated walking area in #BrigadeUtopia apartment in #Varthur, #Bengaluru.
Both parties have accused each other of aggression and approached the police.
The pet owner Tarun Arora was walking his dog when it… pic.twitter.com/gLiLrWMacY
— Hate Detector 🔍 (@HateDetectors) March 6, 2026
சண்டையை விலக்க வந்த ஒரு பெண்ணையும் தருண் தாக்கியதாகச் சொல்லப்பட, விவகாரம் இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது. தருண் முதியவர்கள் மீது புகார் அளிக்க, அந்தப் பெண்ணோ “தருண் எங்களைக் கொலை மிரட்டல் விடுக்கிறார், எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்” எனப் பதில் புகார் அளித்துள்ளார். ஒரு நாய் சிறுநீர் கழித்த விஷயம், இப்போது ஒரு பெரிய அப்பார்ட்மென்ட்டையே ரெண்டு படமாகப் பிரித்து ரகளையை ஏற்படுத்தியுள்ளது.
