பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். நேற்று முன்தினம், இவர் சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.