கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்ச் பாதரை கைது செய்துள்ளனர். மேலும் இவர் இயேசுவை காண வேண்டும் என்றால் தங்கள் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என கூறிய நிலையில் அதை நம்பி 2 பேர் தங்கள் குழந்தைகளை உயிரோடு கல்லறையில் புதைத்தனர். அந்த வழக்கில் பாதர் கைதாகி ஜாமினில் வெளியே வந்த நிலையில் தற்போது இயேசுவை காண வேண்டும் என்றால் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என சர்ச்சுக்கு வருபவர்களிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பி அவர்களும் உண்ணாவிரதம் இருக்க தற்போது 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.