கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000 வரை நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

தற்போது அனைத்து விளையாட்டுகளுக்கும் சென்னைக்கு ரூ.500 மற்ற மாவட்டங்களுக்கு ரூ.200 என நிர்ணயித்துள்ளோம். குறைந்த கட்டணத்தில் விஞ்ஞான ரீதியிலான சிறந்த பயிற்சி தரப்படுகிறது என கூறியுள்ளது.