ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக ஜெர்மனி தங்கள் நாட்டில் உள்ள 3 அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்துள்ளது. பல மேற்கத்திய நாடுகள் கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக அணு ஆற்றலில் தங்கள் முதலீடுகளை அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி மட்டும் தற்போது அணுசக்திகளை முழுமையாக மூடி விட்டு அதிலிருந்து வெளியே வருவதற்கு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை கடந்த 2002-ம் ஆண்டில் இருந்தே அணுசக்தியை விட்டு வெளியேற விரும்பியது.

ஜப்பானில் புகுஷிமா அணுசக்தி பேரழிவுக்கு பிறகு அப்போதைய ஜெர்மன் அதிபர் படிப்படியாக அணுசக்தியில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக  அணு சக்தியில் இருந்து வெளியே வரும் முடிவு தாமதமானது. இந்நிலையில் தற்போது ஜெர்மனி 3 அணு உலைகளை மூடப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் ஜெர்மனியின் இந்த அறிவிப்பு சுற்றுச்சூழல் நிபுணர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.