ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா பெற்ற இந்த அபார வெற்றி, வெறும் கிரிக்கெட் வெற்றியாக மட்டுமன்றி, உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களின்படி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதி மக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் வீதிகளில் இறங்கி இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி தீர்த்தனர். இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களும் ரசிகர்களுடன் இணைந்து உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் இந்த மெகா வெற்றியைப் பாராட்டிப் பல முக்கியப் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.  இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்தியாவின் இந்த மெகா வெற்றியைப் பாராட்டிப் பல முக்கியப் பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்:

வீரேந்தர் சேவாக்: “இஷான் கிஷனின் பேட்டிங் அபாரம். ஆட்டம் முழுவதும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியது” எனத் தெரிவித்துள்ளார். தேவேந்திர ஃபட்நாவிஸ்: “இந்திய அணியின் ஒரு முழுமையான மற்றும் பரபரப்பான வெற்றி” எனப் பாராட்டியுள்ளார். இர்பான் பதான்: ரசிகர்களிடம் “உங்கள் ஞாயிற்றுக்கிழமை எப்படி அமைந்தது?” எனக் கேட்டு வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

 

 

 

View this post on Instagram

 

A post shared by Harsh Gujral (@realharshgujral)