சென்னை மாவட்டத்தில் உள்ள மேள பூடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி செல்வி உயிரிழந்தார். இவருக்கு பிரதீப்(16), பிரவீன்(15), பிரகாஷ்(13) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் பிரகாஷ் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த பிரகாஷை சிவக்குமார் கண்டித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.