குஜராத்தில்   உள்ள ஒரு பள்ளியில், 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி இரண்டு முறை பாலியல் தொல்லை செய்யப்பட்டதாகப் பெற்றோரிடம் கூறியதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கட்டிடத்தின் பின்னால் உள்ள தோட்டத்திற்கு ஒரு ஆண் அழைத்துச் சென்று தன்னை தவறான முறையில் தொடந்ததாகவும், மறுநாள் மீண்டும் அதே ஆண் தொல்லை செய்து தனது வலது கையில் ஊசி போட்டதாகவும் சிறுமி தெரிவித்தாள்.

இது பற்றி யாருக்கும் சொன்னால் கொலை செய்வேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளது. வயிற்று வலியால் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் தந்தை போலீசில் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்  தெரிவித்தார். அந்த நபரை கண்டறிய போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து வருகிறார்கள். ஊசியில் என்ன மருந்து போடப்பட்டது என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அறிக்கைக்காகவும் காத்துள்ளனர்.