தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த மழைப் பொழிவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
