கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Watch | கரூர் துயரம் – காண்போரை கண்கலங்க வைக்கும் காட்சி
விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்ததை, அங்கிருந்த வாய் பேச முடியாத இளைஞர் ஒருவர் சைகை மொழியில் விவரிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.#SunNews | #KarurStampede | #TVKVijayStampede pic.twitter.com/3N1dmZgxOo
— Sun News (@sunnewstamil) October 4, 2025
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகும் வீடியோ ஒன்று, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வாய்பேச முடியாத ஒரு இளைஞர், விஜய் மேடையில் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், நெரிசலுக்குள்ளான 5 பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக சைகை மொழியில் எச்சரிக்கை செய்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த இளைஞரின் முயற்சி மற்றும் நேர்மையான எச்சரிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்வு, ஒரு பெரிய பிரச்சார கூட்டம் எவ்வளவு பாதுகாப்புடனும், திட்டமிட்ட முறையிலும்தான் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான முக்கிய முன்னறிவிப்பாகவும் செயல்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைத்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
