மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ. இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது சளி பிரச்சனை காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது உடல் நலம் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
