அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் நகரை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது இதயம் செயலிழந்ததால் மேரி லேண்ட் மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் இவருக்கு பொருத்தப்பட்டது. பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்கள் அவர் நன்றாக இருந்துள்ளார். முதல் மாதம் மிகவும் ஆரோக்கியமாக தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்றியின் இதயத்தை நிராகரிக்கும் அறிகுறிகள் அவரது உடலில் காட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் லாரன்ஸ் உயிரை காப்பாற்ற பெரிதும் போராடியுள்ளனர். ஆனால் அக்டோபர் 30ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.