புதுடெல்லியில் பத்தாம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எதற்காக நீக்கப்பட்டது என்பது குறித்த விளக்கத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த பாட புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்ட வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனிமங்களின் கால அட்டவணை, எரிசக்திக்கான ஆதாரங்கள், இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு ஆகிய பகுதிகள் அறிவியல் புத்தகத்திலிருந்தும் முக்கிய போராட்டங்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற பகுதிகள் ஜனநாயக புத்தகத்திலிருந்தும் நீக்கப்பட்டன.