உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ’மாமன்னன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஏ.ஆர் ரகுமான் ஒரு பாடலையும், அவரது மகன் ஏ.ஆர் அமீன் ஒரு பாடலை பாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ராசாகண்ணு’ என்ற பாடலை வைகைப்புயல் வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சமூக நீதியை படமாக எடுத்து வசூல் ரீதியாக வெற்றியடைய முடியும் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும் என்று  தெரிவித்துள்ளார். மேலும் சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் சமூக நீதிக்கு எதிரானவர்களை நாம் எதிர்க்க முடிகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் மிக குறைந்த ஒரிஜினல் நடிகர்களில் வடிவேலும் ஒருவர் என்று புகழாரம் தெரிவித்தார்.