கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பிரிண்டிங் பிரஸ் (அச்சுக்கூடம்) ஒன்றில் வேலை செய்து வந்த 51 வயது பெண் ஊழியர் ஒருவர், இயந்திரத்தில் அவரது சேலை எதிர்பாராத விதமாகச் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து நடந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இயந்திரத்தில் சேலை சிக்கியதால், பெண் ஊழியர் உடனடியாக உள்ளே இழுக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்த பிரஸ் ஊழியர்கள் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். . இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பிரிண்டிங் பிரஸ் மெஷினில் சேலை சிக்கியதில் 51 வயது பெண் உயிரி*ந்தார். இது குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன#Kerala #PrintPress #CCTV #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/dILLXE4QSp
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) December 7, 2025
“>
