டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்த இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம், பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

குருகிராம் செக்டார் 77-ல் உள்ள சதர்ன் பெரிபரல் சாலையில் (SPR), கடந்த புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

உணவை டெலிவரி செய்யச் சென்ற ஊழியர் ஒருவரை மர்ம கும்பல் வழிமறித்துள்ளது. அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவரை வலுக்கட்டாயமாகத் இழுத்துச் சென்று ஒரு காருக்குள் திணித்து கடத்திச் சென்றனர்.

பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் இதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சுமார் ₹6.5 லட்சம் பணப் பிரச்சனை காரணமாக இந்தக் கடத்தல் நடந்தது தெரியவந்தது.

வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், கடத்தப்பட்ட ஊழியரை மீட்டுள்ளனர். மேலும், இந்தக் கடத்தலில் தொடர்புடைய இரண்டு நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.