குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள் பலவிதம் என்றாலும், அலிகாரில் ஒரு மனைவி எடுத்த இந்த அதிரடி முடிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அலிகார் மாவட்டம் லோதா பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவருக்குக் மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று போதையில் வீட்டிற்கு வந்த விக்கி, தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளார்.

கணவனின் அராஜகத்தைப் பொறுக்க முடியாத அவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விக்கியைக் கட்டிலோடு சேர்த்து கயிறுகளால் கட்டிப்போட்டார்.

தன் மகன் கட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விக்கியின் தாய், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விக்கியை விடுவித்து விசாரணை நடத்தினர்.

“குடித்துவிட்டு வந்து தினமும் தொல்லை கொடுப்பதால், வேறு வழியின்றி இப்படிச் செய்தேன்” என்று அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்தக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.