“சாகசம் செய்வதற்கும், நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதற்கும் வயது ஒரு தடையே இல்லை” என்பதை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய முதியவர் ஒருவர் உலகிற்கே நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் வான்பரப்பில், சுமார் 18 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு அவர் செய்த ‘ஸ்கை டைவிங்’ சாகசம் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் அதிர வைத்துள்ளது. விமானத்திலிருந்து குதிப்பதற்கு சில நொடிகள் முன்பு அவர் ஆக்ரோஷமாக முழங்கிய “ஜெய்ஹிந்த், ஜெய்பாரத், ஜெய் ஹரியானா” என்ற முழக்கங்கள், பார்ப்பவர் எவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
வானத்தில் பறந்தபடியே இந்திய தேசியக் கொடியை அசைத்து அவர் செய்த இந்த அசாத்திய சாதனை வீடியோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த வயதிலும் இவ்வளவு துணிச்சலோடும், அசாத்திய தைரியத்தோடும் நெஞ்சில் நாட்டுப்பற்றை ஏந்திப் பறந்த அந்தப் பெரியவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இளைஞர்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த முதியவரின் மாஸ் சாகச வீடியோ தான் இப்போ இன்டர்நெட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்!
