ஜப்பானுக்கு முதன்முறையாகச் சென்ற இந்திய நபர் ஒருவர், அங்குள்ள அன்றாட வாழ்க்கையையும் சூழலையும் கண்டு வியந்து, “இது ஏதோ ஒரு தனி உலகம் போலத் தெரிகிறது” என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஜப்பானில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே அங்கிருந்த ஒரு குறிப்பிட்ட விஷயம் அவரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அது வேறொன்றுமில்லை, அங்குள்ள தெருக்களின் அதீத தூய்மையும், அமைதியான சூழலும்தான். இந்த அனுபவம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி, இந்திய நெட்டிசன்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் செய்தியைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ஜப்பானியர்களின் பொது ஒழுக்கத்தைப் பாராட்டிப் பேசி வருகின்றனர். “இது ஒன்றும் மந்திரம் இல்லை, நம் நாட்டில் பலருக்கும் இல்லாத அடிப்படை குடிமைப் பொறுப்புதான் இதற்குக் காரணம்” என்றும், “அரசாங்கமும் மக்களும் தங்களின் கடமையைச் சரியாகச் செய்யும்போதுதான் ஒரு நாடு இப்படி மாறும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், “இதுவே நம்ம ஊராக இருந்தால் ரோட்டோர மரத்தையே பிடுங்கிட்டுப் போயிருப்பாங்க”, “ஹார்ன் சத்தம், நண்பர்களின் கூச்சல் இல்லாமல் நம்ம ஆட்களால் இவ்வளவு அமைதியான இடத்தில் சில வாரங்களுக்கு மேல் வாழ முடியாது” எனச் சிலர் நகைச்சுவையாகவும் தங்களது ஆதங்கங்களை ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ளனர்.