பெங்களூரு போன்ற பெருநகரங்களில் எதுவுமே சாத்தியம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. வசதி இருந்தும் ஏன் இந்த வேலை எனப் பலரையும் யோசிக்க வைத்துள்ளது இந்தச் செய்தி.

பெங்களூருவைச் சேர்ந்த அங்கித் சர்மா என்ற மென்பொருள் பொறியாளர் (Techie), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ankit Sharma | Books | Personality Development| Life (@ankit.is.curious)

அதில், தான் சமீபத்தில் பயணித்த இரண்டு ரேபிடோ டிரைவர்கள் குறித்து வியப்புடன் பேசியுள்ளார். அவர் பயணித்த ஒரு பைக் ஓட்டுநர், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் ‘குவாலிட்டி அனலிஸ்ட்’ (Quality Analyst) ஆகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் ரூ. 80 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள சொந்த 2BHK பிளாட் இருப்பதைக் கேட்டு அங்கித் அதிர்ந்து போயுள்ளார்.

மற்றொரு முறை அவர் சந்தித்த டிரைவர், சொந்தமாக ஒரு கஃபே (Café) நடத்தி வருபவர். அவருக்கும் ரூ. 70 லட்சம் மதிப்பிலான சொந்த வீடு உள்ளது.

“எல்லாமே இருந்தும் ஏன் இந்த வேலை செய்கிறீர்கள்?” என அங்கித் கேட்டபோது, “இது ஒரு ஜாலி, நேரமும் போகும், புது மனிதர்களைச் சந்திக்கலாம்” என அந்த டிரைவர் பதிலளித்துள்ளார்.

பெங்களூருவில் ஐடி வேலையில் இருப்பவர்கள் கூட பகுதி நேரமாக இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது இப்போது பேசுபொருளாகியுள்ளது.