மகாராஷ்டிர மாநிலத்தில் பெற்ற தாயையே சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதையும் உறைந்துபோகச் செய்துள்ளது.

பெற்ற தாயின் பாசத்தையும், ஈடற்ற தியாகத்தையும் மறந்து, சொந்தக் கரங்களாலேயே அன்னையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு அந்த மகனைத் தூண்டிய கொடூரமான பின்னணி என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அமைதியாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொடூரமான முறையில் உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த நாளன்று, வீட்டின் உள்ளே தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏதோ ஒரு விஷயத்திற்காகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் உச்சக்கட்டமாக ஆத்திரமடைந்த மகன், தாயைத் தாக்கி படுகொலை செய்துள்ளான் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாயின் உயிர் பிரிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, தான் செய்த கொடூரமான குற்ற உணர்ச்சியும் பயமும் அவனை ஆட்கொள்ள, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளான். அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அலறி அடித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தக் கொடூரச் செயலுக்குக் குடும்பத் தகராறா, பொருளாதார நெருக்கடியா அல்லது மனநலப் பாதிப்பா காரணம் என்பது குறித்துப் பல்வேறுக் கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் “எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் பேசித் தீர்த்திருக்கலாம், அல்லது வீட்டை விட்டுப் போயிருக்கலாம்… இப்படிப் பெற்ற தாயைக் கொன்னுட்டுத் தானும் செத்துப் போற அளவுக்குக் கொடூரம் நடக்கும்னு நாங்க கனவுல கூட நினைக்கலப்பா” என்று கிராம மக்கள் கண்ணீருடன் புலம்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.