மேஜர் லீக் கிரிக்கெட் 2026 தொடரில், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த லீக் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய வம்சாவளி வீரரான நிகில் சௌத்ரி வாஷிங்டன் அணிக்கு அசாத்திய வெற்றியைத் தேடித்தந்து கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார்.

இப்போட்டியின் கடைசி ஓவரில் வாஷிங்டன் அணி வெல்ல 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், டெக்சாஸ் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்துவீச அழைத்த அகீல் ஹொசைன் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் ஹாட்ரிக் சாதனை படைத்து போட்டியை அப்படியே டெக்சாஸ் பக்கம் திருப்பினார்.

இதனால் கடைசி 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்ற மரண அழுத்தமான சூழல் உருவானது. அப்போது ஸ்ட்ரைக்கிற்கு வந்த நிகில் சௌத்ரி, அகீல் ஹொசைன் வீசிய கடைசி பந்தை இமாலய சிக்ஸராக மாற்றி, அகீலின் மொத்த உழைப்பையும் பாழாக்கியதுடன் வாஷிங்டன் அணியை திரில் வெற்றி பெறச் செய்தார்.

“>

இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இவரை அணியில் எடுக்கக் கோரியும் ஐபிஎல் உள்ளிட்ட பெரிய தொடர்களில் எந்த அணியும் ஆர்வம் காட்டாத நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி வரும் நிகில் சௌத்ரி நிகழ்த்திய இந்த அற்புதம் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.