ஒரு தனியார் தொலைக்காட்சியில் மெகா ஹிட் சீரியான எதிர்நீச்சல் தொடரில் புகழ்பெற்ற ஜான்சிராணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை காயத்ரி கிருஷ்ணன், தற்போது தனது மார்புக்கு மத்தியில் குத்தியுள்ள மிரட்டலான டாட்டூவை காட்டி வெளியிட்டுள்ள போல்டான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது.
டாட்டூ பிரியையான இவர், தற்போது சூரியக் கதிர்கள், பிறை நிலா மற்றும் சீறும் பாம்பு அடங்கிய பவர்ஃபுல்லான புதிய டாட்டூவை குத்தி, கருப்பு நிறச் சட்டையின் மேல் பட்டன்களைத் திறந்து செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளார்; இதைப் பார்த்த ரசிகர்கள் “சீரியலில் பார்த்த ஜான்சிராணியா இது?” என வியந்து கமெண்டுகளைத் தட்டிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அண்மைய பேட்டி ஒன்றில் பேசிய காயத்ரி, தொடருக்காகத் தொடர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டே இருந்ததால் வாய் முழுக்கப் புண்ணாகி, தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டே நடித்ததாகத் தனது அர்ப்பணிப்பைப் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“>
இந்த ஜான்சி ராணி பாத்திரமும், ‘அயலி’ வெப் தொடரும் தான் தனக்கு அடுத்தடுத்து குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா உள்ளிட்ட பல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
