தமிழ் சினிமாவில் ‘காதல் சொல்ல வந்தேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் யுதன் பாலாஜி, தற்போது ஆஸ்திரேலியா நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு வட்டாரத்தில் மிக முக்கியப் பிரிவான ‘அரசு சைபர் பாதுகாப்புத் துறையில்’ அதிகாரப்பூர்வ ஹேக்கராகப் பணியாற்றி வரும் தகவல் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2006ல் விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் அறிமுகமாகி, பின்னர் நதியாவுடன் ‘பட்டாளம்’ படத்தில் ஜெர்ரி என்ற கேரக்டரிலும், பூபதி பாண்டியன் இயக்கத்தில் மேக்னா ராஜுக்கு ஜோடியாக ‘காதல்சொல்ல வந்தேன்’ படத்திலும் ஹீரோவாக நடித்துப் புகழ்பெற்றவர் பாலாஜி.
மெய்யழகி, நகர்வலம் மற்றும் வெள்ள ராஜா வெப் தொடர் எனப் பயணித்த இவர், சமீபத்தில் நடிகை மேக்னா ராஜ் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் போன் மூலமாகப் பேசி, தான் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அங்குள்ள ஆஸ்திரேலிய அரசின் சைபர் பாதுகாப்புத் துறையில் ஹேக்கராகப் பணிபுரிந்து வரும் மாஸ் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
காதல் சொல்ல வந்தேன் ஹீரோவின் தற்போதைய நிலை 🥺 pic.twitter.com/k3Qt4sKVyK
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 26, 2026
“>
திரையில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர், இன்று ஒரு சர்வதேச நாட்டின் பாதுகாப்புத் துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இந்தத் திடுக்கிடும் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
