நொய்டா செக்டர் 62-ல் உள்ள ரஜத் விஹார் பி பிளாக் சொசைட்டியில், கார் நுழைவாயில் தடுப்பை திறக்கத் தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது காரைக் கொண்டு தடுப்பை உடைத்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த முதியவர் என்றும் பாராமல் செக்யூரிட்டி கார்டை சரமாரியாகத் தாக்கியுள்ள அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

பணத்திமிரால் அந்த நபர் செய்த இந்த அராஜகச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த நபரை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“>

 

ஒரு சிறிய தாமதத்திற்காக வயதான முதியவர் மீது கைவைத்த இந்த நபரின் குண்டர் குணம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.