மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள லேக் ஏரியா பகுதியில், காம்பவுண்ட் கதவு வழியாக உள்ளே நுழைந்த ஒரு தெருநாய், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவனை திடீரென தாக்கி கடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் தன்னை காப்பாற்றி கொள்ள  போராடிய நிலையில், அவனை காப்பாற்ற விரைந்த தந்தையையும் நாய் கடித்துள்ளது. இந்த கொடூர காட்சி அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சம்பவத்திற்குப் பிறகு, காயமடைந்த சிறுவனும் அவரது தந்தையும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

“>

 

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.