2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் கல்வியறிவு மிக்கவர்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 125 பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, 7 முனைவர்கள் (PhD), 15 மருத்துவர்கள், 17 பொறியியல் பட்டதாரிகள் மற்றும் 29 சட்ட வல்லுநர்கள் எனப் படித்தவர்களின் பட்டாளமே களம் காண்கிறது.

பெண்களுக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முற்றிலும் புதிய முகங்களுக்குப் போட்டியிட ஜாக்பாட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலில் புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் நோக்கில், படித்த இளைஞர்களுக்கும் அனுபவம் வாய்ந்த பட்டதாரிகளுக்கும் அதிக வாய்ப்புகளை திமுக தலைமை அள்ளி வழங்கியுள்ளது.