பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திடீரென உடல் சோர்வு மற்றும் இதய துடிப்பு குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அவசரமாக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இந்தச் சூழ்நிலை பஞ்சாப் அரசியல் வட்டாரத்திலும், மக்களிடையிலும் பெரும் கவலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஃபோர்டிஸ் மருத்துவமனை வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், முதல்வர் பகவந்த் மான் தற்போது நலமாக உள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது அனைத்து முக்கிய உடல் இயக்கங்களும் இயல்பான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தேவையான கவனிப்புடன் சிகிச்சை அளித்து வருவதாகவும், விரைவில் அவர் வழக்கம்போல அரசுப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.