தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்ற நிலையில் அதனை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். அதாவது குடும்ப நலத்துக்காக திமுகவின் மானத்தை பாஜகவிடம் முதல்வர் ஸ்டாலின் அடகு வைத்து விட்டதாக விஜய் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் சமீபத்தில் சில முக்கிய புள்ளிகளின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது.

அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால தடை வாங்கிய நிலையில் நிரந்தர தடை வேண்டும் என்பதால் தற்போது முதல்வர் ஸ்டாலின் தன் குடும்ப உறுப்பினர்களை காப்பதற்காகவும் உறவினர்கள் மாட்டி விடக்கூடாது என்பதற்காகவும் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

திமுக மற்றும் பாஜக மறைமுக கூட்டணியில் இருப்பதற்கு இதுதான் சான்று. அந்த போட்டோவை உற்று பார்த்தால் பூனை குட்டி வெளியே வந்தது புலப்படும். அவர்கள் இருவரும் மறைமுக கூட்டணியில் பேரம் பேசுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் நடிகர் விஜய் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்ததை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்  பச்சா பாலிடிக்ஸ் என ஒரே வார்த்தையில் பதில் வழங்கினார். மேலும் தக்லைப் படப்பாணியில் ஒரே வார்த்தையில் துரைமுருகன் இது குழந்தை தனமான அரசியல் என்று பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.