கேரளாவில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்ணிடம் இருந்து தங்க நகையைத் திருடிய இரண்டு பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைப் சாதகமாக்கிக்கொண்டு, அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை லாவகமாகப் பறித்துவிட்டுத் தப்ப முயன்றனர்.
ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்த CCTV கேமராவில் இந்தத் திருட்டுச் சம்பவம் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு, அந்த இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கோயில் நிகழ்ச்சியில் பெண்ணிடம் இருந்து நகையை திருடிய CCTV காட்சிகள் வைரல்.. 2 பெண்கள் கைது#Kerala #Chainsnatching #CCTV #Arrest #Newstamil24x7 pic.twitter.com/sbOTBADrwF
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) April 20, 2026
“>
தற்போது இது தொடர்பான CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், கூட்டமான இடங்களுக்குச் செல்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
