ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள பிரேம் நகர் காலனியில், மூன்று வயது பெண் குழந்தை மற்றும் அவளது பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் ஜதிந்தர் குமார் (30), அவரது மனைவி மஞ்சு (28) மற்றும் அவர்களது மகள் அத்விகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரயில்வே அஞ்சல் சேவையில் பணிபுரிந்து வந்த ஜதிந்தர், தனது மகளின் நீண்ட கால உடல்நலக்குறைவு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சோகத்தின் உச்சமாக, அந்தச் சிறுமியின் பிறந்தநாளன்றே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை சுமார் 5:30 மணியளவில் ஜதிந்தர் தனது மைத்துனருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள் வீட்டிற்கு விரைந்து வருவதற்குள், மூவரும் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க வேண்டிய அந்த வீட்டில், தற்போது மகளின் நோய் பாதிப்பால் ஏற்பட்ட துயரத்தினால் ஒட்டுமொத்த குடும்பமும் மடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.