தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் சமூக வலைதளங்களில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நேற்றுதான் இந்த கணக்கை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை (1 Million) எட்டியிருந்தது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து இன்று 20 லட்சத்தை (2 Million) கடந்துள்ளது.
ஒரே நாளில் 10 லட்சம் புதிய பின்தொடர்பவர்கள் இணைந்துள்ள இந்த அதிரடி வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அரசின் திட்டங்கள் மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதையே இந்த வளர்ச்சி காட்டுவதாக சமூக வலைதள ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த அசுர வேக வளர்ச்சி இணையதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
