தற்போதைய முதலமைச்சர் விஜயை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “தூய சக்தி என்று உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்களே, நீங்கள் தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏக்களைத் தூக்கும் சக்தியா?” என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். கிளீன் பாலிடிக்ஸ் (Clean Politics) பேசுவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது டர்டி பாலிடிக்ஸ் (Dirty Politics) செய்வதாக மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிளவுபட்டுள்ள அதிமுக எனும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விஜய் முயற்சி செய்வதாகச் சாடியுள்ள ஸ்டாலின், “உங்களுடைய ஆரம்பமே (Starting) இப்படி இருந்தால், முடிவு (Finishing) எப்படி இருக்கும்?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் வீசியுள்ள இந்த நேரடி அரசியல் அஸ்திரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
