தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிய உடனே, திமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் தனக்கு போன் செய்ததாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அவர்கள் தன்னிடம் எதையோ மறைமுகமாகப் பேசியதாகவும், அப்போது அவர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள் என்பது தனக்கு புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அந்த போன் கால்கள் அவருக்குப் பெரிய குழப்பத்தைத் தந்துள்ளன.

​ஆனால், அடுத்த நாள் காலையில் எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவலைக் கேட்ட பிறகுதான் அவருக்கு உண்மை புரிந்துள்ளது. “திமுகவின் ஆதரவுடன் நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம்” என்று எடப்பாடி தன்னிடம் கூறியதாக சண்முகம் இப்போது ரகசியத்தை உடைத்துள்ளார். அந்த இரண்டு திமுக பிரமுகர்கள் யார் என்பதைச் சொல்ல மறுக்கும் சண்முகம், அதிமுகவும் திமுகவும் ரகசியமாக கைக்கோர்க்கப் பார்த்ததாகக் கிளப்பியுள்ள இந்தத் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.