ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திலுள்ள பெரமனா எனும் இடத்தில் டிப்பர் லாரி- கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் டிப்பர் லாரி தவறான பாதையில் சென்று கார் மீது மோதியதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் யார்யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.