காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள கலகலப்பான மற்றும் அரசியல் நையாண்டி கலந்த வாழ்த்து அட்டைகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. வழக்கமான காதல் செய்திகளுக்குப் பதிலாக, தற்போதைய சர்வதேச அரசியல் விவகாரங்களை நகைச்சுவையுடன் இணைத்து இந்த போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது குறிப்பாக, வெனிசுலா அதிபர் மதுரோவை பிடிப்பது மற்றும் கிரீன்லாந்துடனான அமெரிக்காவின் உறவு நிலை குறித்த வாசகங்கள் அடங்கிய இந்த போஸ்டர்கள், அரசியல் களத்தில் நிலவும் முக்கிய விவகாரங்களை நையாண்டி செய்யும் வகையில் அமைந்துள்ளன. வெள்ளை மாளிகையின் இந்த வித்தியாசமான அணுகுமுறை, உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச உறவுகளைக் மையப்படுத்தி நகைச்சுவை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போன்ற தற்கால இளைய தலைமுறை பயன்படுத்தும் வார்த்தைகளை அரசியல் சூழலுக்கு ஏற்ப கையாண்டிருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பதிவுகள், காதலர் தின கொண்டாட்டத்தில் ஒரு புதிய அரசியல் நகைச்சுவை பரிமாணத்தை சேர்த்துள்ளன.