தஞ்சாவூரில் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் விஜய் தனது உரையின் போது, தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கு இடையே இருக்கும் ரகசிய உடன்படிக்கையை வெட்டவெளிச்சமாக்கினார். “வெளியில் அடித்துக்கொள்வது போல நடித்துவிட்டு, உள்ளுக்குள் ‘நீ இல்லனா நான், நான் இல்லனா நீ’ என டீலிங் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்று சாடினார்.

“மக்களின் ஃபீலிங் முக்கியமில்லை, இவர்களின் டீலிங் தான் முக்கியம்” என்று குறிப்பிட்ட அவர், இந்த விஜய் வந்ததால் இவர்களின் பொழப்பு கெட்டுப்போய்விட்டது என்றும், அதனால்தான் பழி மேல் பழி போட்டுத் தன்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்றும் ஆவேசமாகப் பேசினார்.