இங்கிலாந்தில் மதுபோதையில் இருந்த இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த புகலிடம் கோருபவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவற்ற நிலையில் இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குற்றவாளி, இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், குற்றத்தின் போது அவர் அந்தப் பெண்ணிடம் “இதை நீ ரசித்தாயா?” என்று திமிராகக் கேட்டதும் நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த லீட்ஸ் கிரௌன் நீதிமன்றம், குற்றவாளியின் இந்தச் செயல் அப்பட்டமான மனிதநேயமற்ற என்று சாடியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட மனரீதியான மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவருக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் புகலிடம் தேடி வந்த ஒருவரே இதுபோன்ற கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டது, அங்குள்ள உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், புகலிடம் கோருபவர்கள் மீதான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விவாதங்களையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
