தஞ்சாவூரில் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் விஜய் தனது உரையின் போது, தனது படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்துப் பேசினார். அந்த இக்கட்டான நேரத்தில் தனக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “அந்த ரிலீஸ் பிரச்சனையில் நம்முடைய முதலமைச்சர் கூட பூசி மொழுகிப் பட்டும் படாமலும் குரல் கொடுத்தார், அவருக்கு இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நாகரிகமான முறையில் தனது நன்றியைப் பதிவு செய்தார். அரசியல் ரீதியாக விமர்சித்தாலும், உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்லத் தவறவில்லை தளபதி.