தஞ்சாவூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது உரையின் போது அரசு நிதியில் சிலை வைக்கும் முயற்சியைக் கடுமையாகச் சாடினார். “உங்க அப்பாவுக்கு வெண்கலச் சிலை வைக்கணும்னு நினைக்கிறீங்க, ஆனா சுப்ரீம் கோர்ட்டே இதுக்கு கேள்வி கேட்டுடுச்சு. மக்களோட வரிப் பணத்துல யாருக்குப் புகழ் பாடப் பார்க்குறீங்க?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
“ஊரார் வீட்டு நெய்ல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க” என்று அதிரடியாகப் பேசிய அவர், மக்கள் பணத்தில் சுய விளம்பரம் தேடுவதை நிறுத்தச் சொல்லி தஞ்சை மண்ணில் முழங்கினார்.
