சமூக வலைத்தளப் பிரமுகரும், மும்பை கே.இ.எம் (KEM) அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவியுமான டாக்டர் சேஜல் பவார், நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சர்ச்சை பேச்சு தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோரே நடத்திய அந்த நிகழ்ச்சியில் பேசிய சேஜல், தனது மருத்துவப் படிப்பின் போது உடற்கூறியல் ஆய்வகத்தில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த இறந்த ஆண்களின் உடல்களையும், அவர்களின் பிறப்புறுப்புகளின் அளவுகளையும் தனது தோழியுடன் சேர்ந்து கேலி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மருத்துவத் துறை மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் உடலையும், மருத்துவத் தொழிலையும் அவமதித்த இச்செயலுக்காக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அழுத்தம் அதிகரித்ததை அடுத்து, மும்பை போலீசார் சேஜல் பவார் மீது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை அடுத்து, டாக்டர் சேஜல் பவாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்களும், அவரது பழைய வாட்ஸ்அப் சாட்களும் ‘ரெடிட்’ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தச் சாட்களில், அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஆயுஷ் பதோனி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து, பின்னர் ஏமாற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர் ஆண்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் குணம் கொண்டவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் புகழ்பெற்ற கே.இ.எம் மருத்துவக் கல்லூரியில் பொதுப் பிரிவினருக்கு 600-க்கும் மேல் மதிப்பெண்கள் தேவைப்படும் நிலையில், சேஜல் பவார் நீட் (NEET UG) தேர்வில் 720-க்கு 406 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று, இடஒதுக்கீடு பிரிவின் கீழ் நுழைவு பெற்றுள்ளார் என்ற அவரது கல்வி தகுதி குறித்த விவரங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறியுள்ளன.
