உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சாலை விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுவதைக் காண முடிகிறது.
மேலும் வண்டி சறுக்கிய வேகத்தில் பைக் ஓட்டுநரும் அவருடன் பின்னால் அமர்ந்திருந்த நபரும் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சில மீட்டர்கள் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டனர். காண்போரைக் கண் இமைக்க வைக்கும் இந்த விபத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
झांसी में बड़ा हादसा टला! फिसली बाइक, बुजुर्ग और बच्चे की जान बाल-बाल बची…#ATDigital #CCTV #Accident pic.twitter.com/wRa4zR9tz3
— AajTak (@aajtak) June 12, 2026
“>
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெரும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல் மிகத் நூலிழையில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த அடுத்த கணமே, அந்தச் சாலையில் வந்த பிற வாகன ஓட்டிகளும், அங்கிருந்த பொதுமக்களும் உடனடியாக ஓடிவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.
இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள், சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது அதிவேகத்தைத் தவிர்த்து, எப்போதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துகின்றன.
