பொதுவாக, முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. அதனால்தான், முதலைகளை கண்டவுடன் மக்கள் பீதி கொண்டு ஓடி விடுகிறார்கள். ஆனால், சிலர் மிகவும் தைரியசாலிகள். அதற்கு சான்றாக, தற்போது இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோ பலரை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில், ஒரு நபர் தண்ணீரில் இருந்து ஓடும் முதலையை பிடிக்க முயற்சி செய்கிறார். அதாவது, பொதுவாக மனிதர்களை நோக்கி விரையும் முதலை, இங்கு மனிதரிடமிருந்து தப்பிக்க முயல்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுவாரஸ்ய வீடியோ, சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இதனை 2.9 கோடி பார்வைகள் பெற்றுள்ளதுடன், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீடியோவில், ஒரு படகிலிருந்து குதித்து வெளியேறும் நபர் மெதுவாக முதலையை நோக்கிச் செல்வதைக் காணலாம். முதலையும் ஆபத்தை உணர்ந்தபடி ஓட முயற்சிக்கிறது. ஆனால் அந்த நபர் அதை விட்டுவிடாமல், விரைந்து சென்று தொண்டையைப் பிடிக்கிறார்.

இதன் காரணமாக, முதலை தப்பிக்க முடியாமல் திணறும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த முயற்சியில், அந்த நபருக்கு கைகளிலும் கால்களிலும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறிது ரத்தமும் சொட்டுகிறது.

இந்த வீடியோவில் தோன்றும் நபர், மைக் ஹோல்ஸ்டன் என்கிறவர். அவர் ஒரு பிரபலமான விலங்கு நிபுணராகவும், சமூக வலைதளங்களில் “The Real Tarzann” என அறியப்பட்டவரும் ஆவார்.
அவரது விலங்குகளோடு நெருக்கமான தொடர்பு, பராமரிப்பு திறன், மற்றும் தைரியம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருபுறம் மைக் ஹோல்ஸ்டனின் தைரியத்தை பாராட்டுகின்றனர். அதே நேரத்தில், சிலர் இத்தகைய ஆபத்தான முயற்சிகள் பிறரைப் பின்பற்றச் செய்வதற்கான மோசமான முன்னுதாரணங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

https://www.instagram.com/reel/DOL1rfukQL7/?igsh=djltaThoM3h5eWhl