சமூக ஊடகங்களில் பரவிவரும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள், சில நேரங்களில் மக்கள் பயத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகின்றன. அதுபோன்று, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ராஜ நாகப்பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில், ஒரு இளைஞர், தரையில் அமைதியாக அமர்ந்திருக்கும் ராஜ நாகப்பாம்புக்கு மிக அருகில் நின்று, தனது கைகளையும் கால்களையும் அசைத்து அதை சீண்ட முயற்சிப்பது பதிவாகியுள்ளது.
சில வினாடிகள் அமைதியாக இருந்த நாகம், திடீரென எழுந்து தன் தலையை உயர்த்தி தாக்குதல் நிலைக்கு வருகிறது. பின்னர் பாம்பு முன்னோக்கி நகர்ந்து, அந்த நபரை கடிக்க முனைகிறது. திடுக்கிட்ட அந்த நபர் பின்னோக்கி ஓட முயற்சித்தாலும், பாம்பு தொடர்ந்து அவனைத் தொடர்ந்து வருகின்றது.
View this post on Instagram
இந்தக் காட்சி பார்ப்பவர்களுக்கே பதற செய்கிறது. பார்வையாளர்கள், “இது வேடிக்கை அல்ல; உயிரை பணயம் வைக்கும் செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜ நாகம், உலகின் மிக விஷமுள்ள பாம்புகளுள் ஒன்று. ஒரு முறைக் கடித்தால் மரணம் நிச்சயம். அதனால், இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதுடன், பலர் இந்த நபரின் செயலை “பைத்தியக்காரத்தனம்” என்றும், “பொறுப்பற்ற சூழலியல் கொடுமை” என்றும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இதை விரும்பியதோடு, நேரடி எதிர்வினைகளையும் பதிவு செய்துள்ளனர்.
