விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த வாரம் அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள் மற்றும் குடும்ப தலைவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் கலந்து கொண்ட பெண் ஒருவர் நீயா நானா நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஆறு லட்சம் ரூபாய் செலவு செய்து எட்டரை பவுன் புதிய நகை வாங்கி அணிந்து வந்துள்ளார்.

அதனைப் போலவே மற்றொரு பெண் ஒட்டியானம் வாங்குவதற்காக 20 கிலோ எடையை குறைத்து இறுதியில் அதை வாங்கியுள்ளார். அதற்கும் மேலாக மற்றொரு பெண் தன்னிடம் இருந்த ஏழரை சவரன் நகையை கொடுத்துவிட்டு புதிய டிசைன் என்ற பெயரில் செம்பு கலந்த தங்கத்தை ஐந்து பவுன் வாங்கி ஒரு லட்சத்திற்கு மேல் நஷ்டம் அடைந்துள்ளார். மற்றொரு பெண் புதிய நகையை வாங்கிவிட்டு டிசைன் பிடிக்கவில்லை என்று 20 நாளில் கடைக்குச் சென்று மாற்றி 45 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.