நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்திற்கு என்று புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. www.sci.gov.in என்ற இந்த இணையதளம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு மற்றும் தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் மயமாக்கும் பணிக்கு மத்திய அரசு ஏழாயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.