இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சூழல் பாதிப்படையும் விதமாக பல மாற்றங்கள் அமலுக்கு வரும். அதன்படி மே 1 இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

வங்கி விடுமுறை:

மாதத்தில் மொத்தம் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை என்பதால் வங்கி சார்ந்த சேவைகளை முன்னரே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

மினிமம் பேலன்ஸ்:

YES வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச சராசரி இருப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்கவுண்ட் ப்ரோ மேக்ஸில் குறைந்தபட்ச சராசரி இருப்பு ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்கும். அதனைப் போலவே அதிகபட்ச கட்டணத்திற்கு ஆயிரம் ரூபாய் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டம்:

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 2024 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேவை கட்டணம்:

ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு குறித்த சேவை கணக்கு விதிகளை மாற்றி உள்ள நிலையில் டெபிட் கார்டுக்கு வாடிக்கையாளர்கள் ஆண்டு கட்டணமாக நகர்ப்புறங்களில் 200 ரூபாயும் கிராமப்புறங்களில் 99 ரூபாயும் செலுத்த வேண்டும்.