இன்றைய காலகட்டத்தில் அடுத்தடுத்து பல மாடல்களில் புதிய போண்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பயணங்கள் தாங்கள் வைத்திருக்கக் கூடிய பழைய மாடல்களை கொடுத்துவிட்டு புதிய மாடல்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பழைய போனின் மதிப்பு அறியாமல் சிலர் விற்பனை செய்து விடும் நிலையில் சில விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம். அதாவது பழைய மொபைல் போனை விற்கும் முன்பு அதில் இருக்கும் புகைப்படங்கள், தொடர்புகள் மற்றும் வங்கி தகவல்கள் அனைத்தையும் அளிக்காமல் கொடுப்பதை தவிர்க்கவும். பழைய மொபைல் போனை யாரும் வாங்க மாட்டார்கள் என்று நினைத்து குறைவான விலையை நீங்கள் நிர்ணயிக்க வேண்டாம்.

மார்க்கெட் நிலவரம் அறிந்து உங்களுடைய போனின் விலையை நிர்ணயிக்க வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு தான் பணமிழப்பு ஏற்படும். பாதுகாப்பற்ற முறையில் பணத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான கட்டண செயலிகளை பயன்படுத்தி பணத்தை கொடுப்பது நல்லது. தெரிந்த நபர்களிடம் செல்போனை விற்காமல் அந்நிய நபரிடம் விற்பனை செய்தால் அவர்களின் அடையாளம் மற்றும் தொடர்பு கொள்ள தேவைப்படும் தகவல்களை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும். அடையாளச் சான்றாக அவர்களிடமிருந்து ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை வாங்குவது நல்லது.