மகளிர் தின விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மைக்காலமாகத் தன்னைச் சுற்றி எழும் சர்ச்சைகள் குறித்துத் தனது தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். சமீபத்தில் நடக்கும் சில பிரச்சனைகளால் தொண்டர்கள் ஆவேசப்பட வேண்டாம் என்றும், நீங்களோ அல்லது உங்கள் மனமோ கஷ்டப்படுவதைப் பார்த்தால் எனக்குத்தான் வலிக்கிறது என்றும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார். தேவையற்ற விவாதங்களில் இறங்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனத் தனது கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
Recently, there have been a few problems happening. I see that you are getting hurt while fighting for it. I’m getting hurt seeing you guys getting hurt. I’ll take care of the problems. Don’t get hurt. Nothing to worry about..
– #ThalapathyVijay's speech pic.twitter.com/8QFSWVjklU
— Laxmi Kanth (@iammoviebuff007) March 7, 2026
மேலும், தனக்கெதிராக வரும் விமர்சனங்கள் எதற்கும் வருத்தப்படத் தேவையில்லை என்றும், அவை எதையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் விஜய் உறுதி அளித்தார். “நீங்கள் எதற்கும் கலங்காதீர்கள், தன்னம்பிக்கையோடு இருங்கள்; நாம் அனைவரும் இணைந்து மக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துவோம், நிச்சயம் நல்லதே நடக்கும்” என்று கூறித் தனது தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தார்.
